

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சிங்கப்பூரின் லோ கீன் யூ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்சயா சென் முதல் செட்டை 21-17 என வென்றார். இதற்கு பதிலடியாக சிங்கப்பூர் வீரர் 2வது செட்டை 21-10 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லக்சயா சென் 21-13 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சமீபத்தில் நடந்த ஹைலோ ஓபன், ஜப்பான் ஓபன் தொடர்களில் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.