மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.இந்திய வீரர் லக்‌ஷயா சென் காலிறுதி சுற்றில் வென்றார்.
மக்காவ் ஓபன் பேட்மிண்டன்:  அரையிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்
Published on

மக்காவ்:

மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் சூ சுவான் சென் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் 21-14, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் தருண் மன்னேபல்லி சீனாவின் ஹூ ஜென்னை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com