

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் அபாரமாக ஆடி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பின்லாந்தின் காலே கோலிஜன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பின்லாந்து வீரர் 21-14 என்ற செட் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக ஆடிய லக்சயா சென் அடுத்த இரு செட்களை 21-17, 21-13 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் லக்சயா சென், பிரான்சின் தோமா ஜுனியர் பபோவ் உடன் மோதுகிறார்.
ஏற்கனவே, பெண்கள் பிரிவில் பிவி சிந்து, அன்மோல் கார்ப் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.