

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறி அசத்தினார்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி குமாமோட்டோ நகரில் நடந்து வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹான் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லக்சயா சென் முதல் செட்டை 21-12 என எளிதில் வென்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடிய ஆல்வி பர்ஹான் 2வது செட்டை 21-15 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லக்சயா சென் 21-11 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டி 70 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
சமீபத்தில் நடந்த ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரில் லக்சயா சென் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.