ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர் ஜார்ஜ் தோல்வி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர் ஜார்ஜ் தோல்வி
Published on

டோக்கியோ:

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் யோகோஹமாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், ஜப்பான் வீரர் கண்டா சுனேயமா உடன் மோதினார்.

இதில் ஜார்ஜ் 19-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com