சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த், தன்வி ஷர்மா முதல் சுற்றில் வெற்றி

இந்தியாவின் பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் இந்தத் தொடரில் இருந்து விலகினர்.
tanvi sharma, kidambi srikanth
Published on
Summary

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தன்வி ஷர்மா ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது. வரும் 6-ம் தேதியுடன் இந்தத் தொடர் முடிவடைகிறது. இத்தொடரில் இருந்து இந்தியாவின் பி.வி.சிந்து, ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் விலகியுள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்​றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீன தைபேயின் சீ யூ ஜென் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, டென்மார்க்கின் அமலி ஷுல்ஸ் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய தன்வி ஷர்மா 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஏற்கனவே, ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் லக்‌ஷயா சென்னும், பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடாவும் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com