சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி

இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
kidambi
Published on
Summary

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது. வரும் 6-ம் தேதியுடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்​றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் லீ சியுக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஹாங்காங் வீரர் 21-16, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

ஏற்கனவே, ஆண்கள் ஒற்றையரில் லக்‌ஷயா சென்னும், பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மாவும் தோல்வி அடைந்து வெளியேறினர்.

ஆண்கள் இரட்டையரில் இந்திய ஜோடி இன்று காலிறுதியில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com