

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறினார்.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. வரும் 6-ம் தேதியுடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், கனடாவின் விக்டர் லாய் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-18, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஏற்கனவே, ஆண்கள் ஒற்றையரில் லக்ஷயா சென்னும், பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா தோல்வி அடைந்து வெளியேறினர்.