முகமது சிராஜ் நீக்கம் குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை- கபில்தேவ்

எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது, தேர்வாளர்களிடம் தான் கேட்க வேண்டும்.
Mohammad siraj- Kapil dev
Published on: 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து முகமது சிராஜ் நீக்கப்பட்டார். 11 பேர் கொண்ட அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

முகமது சிராஜ் நீக்கம் தொடர்பாக முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், ரவிசாஸ்திரி, முன்னாள் சுழற்பந்து வீரர் அஸ்வின் ஆகியோர் அணி நிர்வாகத்தை விமர்சித்து இருந்தனர்.

கபில்தேவ்

இதற்கிடையே முகமது சிராஜ் நீக்கப்பட்டது குறித்து பாகுபாடு காட்டப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் குற்றம்சாட்டினார்.

அவரது பெயர்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட தற்கான காரணம் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் பதில் அளித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து முகமது சிராஜ் நீக்கப்பட்டது குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை. எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது

தேர்வாளர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் ஒரு சாதாரண நபர். எங்களை போன்றவர்கள் கருத்து சொல்லக்கூடாது.

அந்தப் பொறுப்பில் உள்ளவர்கள் பதில் அளிக்க வேண்டும். அவர்கள் சிறந்த வேலையை செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நம்மால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது. ஒரு அமைப்பை விமர்சிக்க முடியாது. ஏனென்றால் அந்த அமைப்பு அப்படித் தான் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

பொருட்டல்ல

இந்திய கிரிக்கெட் சிறப்பாக செயல்படுகிறது. அதுதான் மிகவும் முக்கியம். எனக்கு அவரை (முகமது சிராஜ்) பிடிக்கும், ஆனால் தேர்வாளர், மேலாளர், கேப்டன் ஆகியோர்தான் வீரர்களை தேர்ந்து எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

நமது விருப்பு வெறுப்புகள் ஒரு பொருட்டல்ல. மாறாக அந்த அமைப்பு எப்படித் திட்டமிடுகிறது என்பதே முக்கியம்.

இவ்வாறு கபில் தேவ் கூறியுள்ளார்.

1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதல் முறை யாக உலக கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

X