ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன்: இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்

எகிப்தை சேர்ந்த 3ஆம் நிலை வீராங்கனையை வீழ்த்தினார்.38 நிமிடத்தில் வீழ்த்திய ஜோஷ்னாவுக்கு 15 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்பட்டது.
ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன்: இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்
Published on

ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பா, எகிப்தின் ஹயா அலியை எதிர்கொண்டார். இதில் எகிப்து வீராங்கனை ஹயா அலி 3ஆம் நிலை வீராங்கனை ஆவார்.

இதில் ஜோஷ்னா சின்னப்பா 11-5, 11-9, 6-11, 11-8 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு ஜோஷ்னா சின்னப்பாவுக்கு 38 நிமிடம் தேவைப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்ற ஜோஷ்னா சின்னப்பாவுக்கு 15 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

அரையிறுதியில் மற்றொரு எகிப்து வீராங்கனையை ராணா இஸ்மாயிலை (4ஆம் நிலை வீராங்கனை) 11-7, 11-1, 11-5 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com