ஆசிய விளையாட்டு: சாப்ட் டென்னிசில் வெண்கலம் வென்ற இந்தியா

பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.
jay meena
Published on
Summary

ஆசிய விளையாட்டு போட்டியில் சாப்ட் டென்னிசில் இந்தியாவின் ஜெய் மீனா முதல் முறையாக வெண்கலம் வென்று அசத்தினார்.

20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் நகோயா நகரில் நடந்து வருகிறது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் பெற்றது.

கிரிக்கெட்டில் தங்கம்

மகளிர் கிரிக்கெட் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்தது. துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர்ரைபிள் தனிநபர் பிரிவில் இளவேனில் வாலறிவன், ஹிமான்சு தில்லான் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், ருத்ராங்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

10 மீட்டர் ஏர்ரைபிள் பெண்கள் அணிகள் பிரிவிலும் (இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், விதர்ஷா வினோத்), 10 மீட்டர் ஏர்ரைபிள் ஆண்கள் அணிகள் பிரிவிலும் (ஹிமான்சு தில்லான், ருத்ராங்ஷ் பாட்டீல், பார்த் மானே) வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

தற்காப்பு கலையில் ( மிக்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ்) சுஜிகா தாரியல் வெண்கலமும் பெற்றார்.

ஒரு வெள்ளி, 2 வெண்கலம்

இன்று நடைபெற்ற பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கமும், துப்பாக்கிச் சுடுதலில் ஸ்கீட் பிரிவில் இந்திய ஆண்கள், பெண்கள் பிரிவில் 2 வெண்கலமும் கிடைத்தன.

சாப்ட் டென்னிஸ்

இந்நிலையில், சாப்ட் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெய் மீனாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் சாப்ட் டென்னிஸ் போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். அவர் அரையிறுதியில் ஜப்பான் வீரரிடம் தோற்றதால் 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

இந்தியா இதுவரை ஒரு தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com