

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் இஷாராணி பரூவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் இஷாராணி பரூவா, தாய்லாந்தின் சரன்ரக் விதித்சன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தாய்லாந்து வீராங்கனை 21-8, 21-15 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் இந்தியாவின் இஷாராணி பரூவா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டைய்ர மற்றும் கலப்பு இரட்டையர் என அனைத்துப் பிரிவிலும் இந்திய அணி ஏமாற்றம் அளித்துள்ளது.