ஐபிஎல் 2026: லக்னோ அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 2026: லக்னோ அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு!
Published on

ஐபிஎல் 2026 தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் 50வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

லக்னோவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இப்போட்டியில் லக்னோ தோற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற இயலாது. இத்தொடரின் முந்தைய மோதலில், பெங்களூரு அணி லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதனால் இப்போட்டியில் பெங்களூருவை வீழ்த்த லக்னோ தீவிரமாக முயற்சிக்கும் என எதிர்பார்கப்படுகிறது.

லக்னோ பிளேியிங் லெவன்

மிட்செல் மார்ஷ், அர்ஷின் குல்கர்னி, நிக்கோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம், ரிஷப் பந்த், அக்ஷத் ரகுவன்ஷி, ஹிமத் சிங், சபாஷ் அஹமத், திக்வேஷ் ரதி, முகமது ஷமி, ப்ரின்ஷ் யாதவ்

பெங்களூரு பிளேயிங் லெவன்

விராட் கோலி, ஜேக்கப் பெத்தெல், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதர், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, ரஷிக் தார்

X

Maalai Malar
www.maalaimalar.com