லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி- டெல்லி அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

196 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களே சேர்த்தது.
விக்கெட் கைப்பற்றியதை கொண்டாடும் லக்னோ வீரர்கள்
விக்கெட் கைப்பற்றியதை கொண்டாடும் லக்னோ வீரர்கள்
Published on

மும்பை:

ஐ.பி.எல் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள்  குவித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன்கள் விளாசினார். தீபக் ஹூடா 52 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 196 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய டெல்லி அணியின் துவக்க வீரர்கள் பிருத்வி ஷா 5 ரன்களிலும், டேவிட் வார்னர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் 37 ரன்கள், கேப்டன்  ரிஷப் பண்ட் 44 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. 

கடுமையாக போராடிய பாவெல் 35 ரன்கள், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் சேர்த்தனர். எனினும் டெல்லி அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களே சேர்க்க முடிந்தது. இதனால் லக்னோ அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் லக்னோ அணி 7வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 14 புள்ளிகள் பெற்று  புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com