ஆசிய விளையாட்டு: முதல் பதக்கம் வென்ற இந்தியா - துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
shooting
Published on
Summary

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளி வென்று அசத்தியது.

இளவேனில் வாலறிவன், சோனம் மாஸ்கர், விதர்ஷா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது.

இது இந்தியாவுக்கான முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சுடுதலில் சீனா தங்கப் பதக்கமும், ஜப்பான் வெண்கலப் பதக்கமும் வென்றது.

தனிநபர் பிரிவிலும் இந்தியாவின் இளவேனில், சோனம் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com