பாரா ஒலிம்பிக்: குண்டு எறிதலில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

குண்டு எறிதலில் இந்திய வீரர் சச்சின் வெள்ளிப் பதக்கம் வென்றார்.இந்தியா இதுவரை 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 21 பதக்கம் வென்றுள்ளது.
பாரா ஒலிம்பிக்: குண்டு எறிதலில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
Published on

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

இந்தியா இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என 20 பதக்கம் வென்றுள்ளது.

இந்நிலையில், குண்டு எறிதலில் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சச்சின் சர்ஜியாரோ கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இவர் மொத்தம் 16.32 புள்ளிகள் எடுத்து 2வது இடம் பிடித்தார். இதன்மூலம் பாரா அதலெட்டிக்கில் இந்தியா 11பதக்கங்களைப் பெற்றுள்ளது.

கனடா வீரர் தங்கப் பதக்கமும், குரோசிய வீரர் வெண்கலமும் வென்றார்.

இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com