இந்தியாவுக்காக முதல் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது- மகளிர் அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர்

இலங்கைக்கு வெள்ளியும், பாகிஸ்தானுக்கு வெண்கலமும் கிடைத்தது.
Harman preeth kaur
Published on

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் மகளிர் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைத்தது.

ஹர்மன் பிரீத் கவூர்

ஹர்மன் பிரீத் கவூர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி இறுதிப் போட்டியில் இலங்கையை 147 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் தங்கப் பதக்கம் பெற்றது.

கடந்த ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தற்போது 2-வது முறையாக தங்கம் வென்று சாதித்துள்ளது. இலங்கைக்கு வெள்ளியும், பாகிஸ்தானுக்கு வெண்கலமும் கிடைத்தது.

ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றது குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர் கூறியதாவது:-

ஒலிம்பிக்கில் சவால்

ஆசிய போட்டியுடன் ஒப்பிடும்போதும் உலக அளவிலான போட்டிகளில் சவால்கள் அதிகம் இருப்பதாக உணர்கிறேன்.

உலக கோப்பை அல்லது ஒலிம்பிக்கில் வெல்வது போன்ற மிகப் பெரிய சவால்கள் அடுத்தடுத்து உள்ளன. அதனால் தொடர்ச்சியாக ஒரு அணியாக எங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆசியப் போட்டியின் வெற்றியிலேயே நாங்கள் தங்கிவிட முடியாது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு எங்களுடைய கடின உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கிறது.

அப்படி செய்தால் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வதற்கான சிறப்பான இடத்தில் இருப்போம்.

ஆசியப் விளையாட்டில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா தொடர்ந்து பல பதக்கங்களை வெல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஷபாலி வர்மா

இந்தியா மீண்டும் தங்கம் வெல்ல ஷபாலி வர்மா முக்கிய பங்கு வகித்தார். அவர் 3 ஆட்டத்தில் ஒரு சதத்துடன் 188 ரன்கள் எடுத்தார். சராசரி 188 ஆகும்.

ஆசிய விளையாட்டில் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து ஷபாலி வர்மா கூறியதாவது:-

தேசியக் கொடி உயரப் பறப்பதை உறுதி செய்வதற்காகவே நாங்கள் விளையாடினோம். அதை காட்டிலும் வேறு எந்தவொரு பெரிய உணர்வும் இருந்துவிட முடியாது.

தேசியக் கொடியை உயர பறக்க வைப்பதே எங்களது இலக்காக இருந்தது. அதனால் தங்கப் பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

நாடு திரும்பியவுடன் குடும்பத்துடன் இணைந்து இந்த வெற்றியை கொண்டாடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com