உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: 3வது சுற்றில் சிந்து உள்ளிட்ட இந்தியர்கள் ஏமாற்றம்

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
pv sindhu
Published on

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் வாங் ஜியீ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சீன வீராங்கனை முதல் செட்டை 21-11 என வென்றார். இதற்கு பதிலடியாக பி.வி.சிந்து 2வது செட்டை 21-15 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சீன வீராங்கனை 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரெஸ்டோ ஜோடியும் தோல்வி அடைந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 19-21, 11-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹானிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com