FIH தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணி

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.
India Women's Hockey Team
Published on: 

இந்திய மகளிர் ஹாக்கி அணி, FIH தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. அக்டோபர் 2003-இல் உலக அமைப்பு இந்த முறையை அறிமுகப்படுத்தியதில் இருந்து இதுவே அந்த அணி பெற்ற மிக உயர்ந்த இடமாகும்.

இதற்கு முன்னர், வலுவான ப்ரோ லீக் தொடரை தொடர்ந்து, மே-ஜூன் 2022-இல் ஆறாவது இடத்தை பிடித்ததே அணியின் சிறந்த இடமாக இருந்தது. 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தை பிடித்ததை தொடர்ந்து இந்தியா எட்டாவது இடத்தில் இருந்தது.

தரவரிசை வெளியீடு:

2018-இல் உலக கோப்பையின் காலிறுதிக்கு முன்னேறிய பிறகு, அணி ஒன்பதாவது இடத்தில் இருந்தது. நேற்று (செவ்வாய் கிழமை) FIH வெளியிட்ட தரவரிசையில், நெதர்லாந்து முதலிடத்திலும், அதை தொடர்ந்து அர்ஜென்டினா, பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

அபார வெற்றி:

முன்னதாக நடந்த மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில், ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நடப்பு சாம்பியனான இந்திய அணி, தனது நான்காவது லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் வென்ற சீனாவை 6-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது.

தற்போது இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு அணிகளும் தலா நான்கு போட்டிகளில் விளையாடி, தலா 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. இந்த இரு அணிகளும் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.

X