

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதில் கலப்பு இரட்டையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரெஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, சீனாவின் பாங்குய்- குவோ ஜின்வா ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சீன ஜோடி 21-16, 21-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இதன்மூலம் இந்தியாவின் கிரெஸ்டோ-கபிலா ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.