உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறியது ஜாலி-கோபிசந்த் ஜோடி

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது.
jolly, gayatri
Published on

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீனாவின் ஜியா யீபான் - ஜாங் சுக்சியான் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய சீன ஜோடி 21-16 என முதல் செட்டைக் கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com