

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரெஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, மக்காவின் லியோங் லோக் சோங்-வெங் சி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-11, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.