ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
kapila, crasto
Published on

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.

இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பிவி சிந்து, உன்னதி ஹூடா, சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கிரெட்டி ஜோடி, தனிஷாகிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, ஸ்காட்லாந்தின் ஜூலி மெக்பெர்சன் - அலெக்சாண்டர் டன் ஜோடி உடன் மோதியது.

இதில் இந்திய ஜோடி 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

X

Maalai Malar
www.maalaimalar.com