

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் கபூர்- ருத்விகா கட்டே ஜோடி, தைவானின் ஹூ லிங் -பேங்-யாங் போ ஹான் ஜோடி உடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய இந்திய ஜோடி 21-14, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் 2வது சுற்றில் இந்திய ஜோடி, பிரான்சின் டெல்பின் டெல்ரூ - தாம் ஜிகல் ஜோடி உடன் மோதுகிறது.