இந்திய ஓபன் பேட்மிண்டன் - இரட்டையர் இறுதி ஆட்டத்திற்கு இந்திய இணை முன்னேற்றம்

பிரான்ஸ் இணையை வீழ்த்திய இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி
இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி
Published on

புதுடெல்லி:


டெல்லியில் உள்ள கே.டி. ஜாதவ் ஸ்டேடியத்தில் நடப்பாண்டிற்கான இந்திய ஓபன் பேட்மிண்டன்  போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இதில், ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, பிரான்ஸ் நாட்டின் பேபியன் டெல்ரூ மற்றும் வில்லியம் வில்லெஜர் இணையை எதிர்த்து விளையாடியது.

37 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 21-10, 21-18 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் இணையை வீழ்த்திய இந்திய இணை,  இறுதி சுற்று போட்டிக்கு முன்னேறி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com