ஆசிய விளையாட்டு 2023 - இந்தியாவுக்கு முதல் தங்கம் - துப்பாக்கிச் சுடுதலில் ஆண்கள் அணி அபாரம்

துப்பாக்கிச் சுடுதலில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்றது. கொரியா வெள்ளிப் பதக்கமும், சீனா வெண்கலப் பதக்கமும் வென்றது.
ஆசிய விளையாட்டு 2023 - இந்தியாவுக்கு முதல் தங்கம் - துப்பாக்கிச் சுடுதலில் ஆண்கள் அணி அபாரம்
Published on

பீஜிங்:

ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய ஆண்கள் அணி சார்பில் திவ்யான்ஷிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாட்டீல், பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர்.

கொரியா வெள்ளிப் பதக்கமும், சீனா வெண்கலப் பதக்கமும் வென்றது.

இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com