ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
team india
Published on: 
Summary

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. ஹாக்கியில் இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. நடப்பு போட்டியில் இந்திய அணி ஆதிக்கத்துடன் விளையாடி வருகிறது.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 4 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்தியா, பாகிஸ்தான் மோதல்

இந்நிலையில், ஹாக்கி அரையிறுதியில் இந்திய ஆண்கள் அணி பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

இந்தப் போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 8 மற்றும் 13வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தார். சுக்ஜீத் சிங் 23வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

அபிஷேக் அசத்தல்

ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் 3-3 என சமனிலை பெற்றன. ஆட்டம் முடிய உள்ள நிலையில் கடைசி நிமிடத்தில் இந்தியாவின் அபிஷேக் வெற்றிக்கான கோலை அடித்து இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

ஆண்கள், பெண்கள் அணி அசத்தல்

இந்த வெற்றியின் மூலம் ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com