ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆண்கள் அணி

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 4 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
indian mens
Published on: 
Summary

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. நடப்பு போட்டியில் இந்திய அணி ஆதிக்கத்துடன் விளையாடி வருகிறது.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 4 போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜப்பானை 2-0 என வீழ்த்தியது

இந்நிலையில், இன்று நடைபெற்ற கடைசி லீக் சுற்றில் இந்திய அணி ஜப்பானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் அபிஷேக் 15-வது நிமிடத்திலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 40-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

முதல் போட்டியில் இந்தோனேசியாவை 13-1 எனவும், இரண்டாவது போட்டியில் இலங்கையை 16-1 எனவும், மூன்றாவது போட்டியில் தென் கொரியாவை 8-2 எனவும் வீழ்த்தியது.

4 லீக் போட்டியிலும் வெற்றி

நடப்பு சாம்பியனான இந்திய அணி 4 லீக் போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதவிருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com