

நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் சமீபத்தில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. பொதுவாக இந்திய ஹாக்கி அணிகள் பாரம்பரியமான ப்ளூ கலர் ஜெர்சி அணிந்து விளையாடுவார்கள்.
ஆனால், உலக கோப்பையில் காவி கலர் (Orange) ஜெர்சி அணிந்து விளையாடினர். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு விளையாட்டிலும் காவியை புகுத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
அத்துடன் ஹாக்கி இந்தியாவில் உள்ள நிர்வாகிகள் மற்றும் குழுவின் ஒப்புதல் இன்றி செயல்படுத்தப்பட்டதாக என கடுமையாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலிப் திர்கே பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) அணியின் சீருடை நிறங்கள் குறித்து எங்களுக்கு விருப்பத் தேர்வுகளை வழங்கியிருந்தது. அதன்படி, இந்திய அணியின் சீருடைக்கு நீல நிறத்தை ஹாக்கி இந்தியா (Hockey India) முதல் தேர்வாக தேர்ந்தெடுத்தது. ஆரஞ்சு நிறம் இரண்டாவது தேர்வாக இருக்கும்.
உலகக் கோப்பைக்கு முன்பே, ஆரஞ்சு நிற ஜெர்சி நிரந்தரமானது அல்ல என்றும், எதிர்காலத்தில் அது மாற்றப்படலாம் என்றும் நான் கூறியிருந்தேன். இப்போது, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக மீண்டும் நீல நிறம் கொண்டுவரப்பட்டுள்ளது. அணி நீல நிற ஜெர்சியில் விளையாடும்.
ஆசிய போட்டி இந்திய அணிக்கு முக்கியமான தொடராகும். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியை உறுதிப்படுத்த முக்கியமானதாக இருக்கும்.