உலக மல்யுத்தம் - தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தோல்வி

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியாவில் நடந்து வருகிறது. இதில் 53 கிலோ எடைப்பிரிவின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தோல்வி அடைந்தார்.
வினேஷ் போகத்
வினேஷ் போகத்
Published on

பெல்கிரேடு:

17-வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் கடந்த 10-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது.

53 கிலோ எடைப்பிரிவில் அரியானாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 53 கிலோ உடல் எடைப்பிரிவின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மங்கோலியாவின் குலான் பட்குயாவை சந்தித்தார். தொடக்கம் முதலே சற்றே தடுமாறிய வினேஷ் போகத் 0-7 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து 3 முறை தங்கப்பதக்கம் வென்றவர் வினேஷ் போகத் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com