உலகக் கோப்பை வில்வித்தையில் தங்க பதக்கங்கள் வென்ற இந்தியா

சீன தைபேயின் சென் யி ஹூன்- சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
உலகக் கோப்பை வில்வித்தையில் தங்க பதக்கங்கள் வென்ற இந்தியா
Published on

துருக்கியில் உள்ள அண்டால்யா நகரில் உலகக் கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம்-ஒஜாஸ் தியோதால் இணை 159-154 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் சென் யி ஹூன்- சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.

இதேபோல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் 149-146 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சாரா லோபெஸ்சை (கொலம்பியா) வீழ்த்தி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com