

ஆசிய விளையாட்டு கலப்பு இரட்டையர் வில்வித்தையில் தனிபார்த்தி சிகிதா ராவ், சாஹில் ராஜேஷ் ஜாதவ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்தியா-தென் கொரியா இடையிலான இறுதிப்போட்டியில் 157- 157 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில் சூட்-ஆப் நடத்தப்பட்டது.
சூட்-ஆப்பில் துல்லியமாகச் செயல்பட்ட இந்திய இணை 20-19 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரிய இணையை வீழ்த்தி தங்கம் வென்றது.
முன்னதாக, ஆசிய விளையாட்டு வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் சீனாவை 238-234 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது.
இந்திய வில்வித்தை வீராங்கனைகள் ஜோதி சுரேகா வென்னம், சிக்கதா தனிபார்த்தி, பிரித்திகா பிரதீப் தங்கப்பதக்கம் வென்றனர்.
ஆசிய விளையாட்டு பதக்கப்பட்டியலில் இந்தியா 8 தங்கம், 21 வெள்ளி, 26 வெண்கஙம் என 54 பதக்கங்களுடன் 9ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.