ஆசிய விளையாட்டு: துப்பாக்கிச் சுடுதலில் இந்திய அணிக்கு மேலும் ஒரு வெள்ளி

துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு இதுவரை 11 பதக்கம் பெற்றுள்ளது.
team india
Published on: 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு இன்று மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது.

50 மீட்டர் ரைபிள் பிரிவு

பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் (நிலைகள்) அணிகள் பிரிவில் இந்தப் பதக்கம் கிடைத்தது. திலோத்தமா சென், விதர்சா வினோத், ஆஷி சவுத்ரி ஆகியோர் அடங்கிய அணி 1763 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

சீனா 1773 புள்ளிகள் பெற்று தங்கமும், கஜகஸ்தான் வெண்கலமும் (1754 புள்ளிகள்) பெற்றன.

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு இதுவரை 11 பதக்கம் பெற்றுள்ளது.

4-வது இடம்

தனிநபர் பிரிவில் திலோத்தம்மா சென், விதர்சனா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர்.

இறுதிப்போட்டியில் திலோத்தமா சென் 4-வது இடம்பிடித்து வெண்கலத்தைத் தவறவிட்டார். அவர் 337.3 புள்ளிகளை பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை விதர்சா 5-வது இடம் பிடித்தார்.

இந்தியா இதுவரை 3 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com