16-வது உலகக் கோப்பை ஆக்கி தொடர் இன்று தொடக்கம்- வேல்ஸ் உடன் மோதும் இந்தியா

30-ந் தேதி வரை உலக கோப்பை ஆக்கி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறுகிறது.
Hockey
Published on

16-வது உலக கோப்பை ஆக்கி போட்டியை பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

இந்த போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 30-ந் தேதி வரை உலக கோப்பை ஆக்கி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறுகிறது.

16 நாடுகள்

ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 16 நாடுகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து வேல்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

‘ஏ’ பிரிவில் நெதர்லாந்து, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான் ‘பி’ பிரி வில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, பெல்ஜியம்,

பிரான்ஸ், மலேசியா ‘சி’ பிரிவில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்று உள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அதாவது 8 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.

எஞ்சிய 8 அணிகள்‌ 9 முதல் 16-வது இடங்க ளுக்கான போட்டியில் ஆடும். பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் ஆகிய நகரங்களில் போட்டி நடக்கிறது. மொத்தம் 50 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

இந்தியா - வேல்ஸ்

உலக கோப்பை ஆக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா-வேல்ஸ் (‘டி’ பிரிவு) அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆம்ஸ்டல்வீனில் போட்டி நடக்கிறது.

ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்ற இந்திய அணி உலக கோப்பையில் பெரிதாக சாதிக்கவில்லை.

1975-ல் மட்டும் சாம்பியன் ஆனது. அதற்கு பிறகு சோபிக்க முடியவில்லை. 51 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை மீண்டும் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற ஆட்டங்கள்

இன்று நடைபெறும் மற்ற போட்டிகளில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி- மலேசியா (மாலை 6), இங்கிலாந்து- பாகிஸ்தான் (இரவு 10.30), பெல்ஜியம்- பிரான்ஸ் (நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.

பெண்கள் பிரிவில் நடைபெறும் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-ஜப்பான், ஜெர்மனி-ஸ்கார்ட்லாந்து, நெதர்லாந்து-சிலி, அர்ஜென்டினா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com