

ஆசிய விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழு பிரிவில் இந்தியா பதக்கத்தை தவறவிட்டது.
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த கலப்பு பிரிவினருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4வது இடம் பிடித்தது.
தகுதிச்சுற்றில் 634.9 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்த இளவேனில் வாலறிவன்-பார்த்த் மானே இணை, இறுதிப் போட்டியில் 376.3 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தது.
இந்திய அணி துப்பாக்கிச் சுடுதலில் 4 வெள்ளி, ஒரு வெண்கலமும், தற்காப்பு கலையில் ஒரு வெண்கலமும் வென்று மொத்தம் 6 பதக்கம் வென்று 12-வது இடத்தில் உள்ளது.