உலக கோப்பை ஹாக்கி: அர்ஜென்டினாவிடம் 3-5 என இந்தியா தோல்வி- அரையிறுதி வாய்ப்பை இழந்தது

ஸ்டேஜ் 2-ல் இந்தியா ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.
ஹாக்கி இந்தியா
ஹாக்கி இந்தியா
Published on
Summary

முதல் ஸ்டேஜில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்த நிலையில், அதன்பிறகு இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்து இந்தியா ஏமாற்றம் அடைந்தது.

ஹாக்கி உலக கோப்பை நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்டேஜ் 2 சுற்றில் இந்தியா தனது கடைசி போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-5 எனத் தோல்வியடைந்தது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே இந்தியாவுக்கு அதர்ச்சி காத்திருந்தது. அர்ஜென்டினா வீரர் ஜோக்யின் தோஸ்கானி 41-வது விநாடிகளில் கோல் அடித்தார். அதன்பின் 5.53 நிமிடத்தில் நிக்கோலஸ் டெல்லா டொர்ரே கோல் அடித்தார். இந்தியாவைச் சேர்ந்த 9.12-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் இருந்தார்.

2-வது காலிறுதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 3-வது காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. 32.20 நிமிடத்தில் தாமஸ் டோமென் கோல் அடித்தார். 44.40 நிமிடத்தில் தாமஸ் டோமென் மீண்டும் கோல் அடித்தார். இதனால் 3-வது காலிறுதியில் அர்ஜென்டினா 4-1 என முன்னிலைப் பெற்றது.

கடைசி காலிறுதி ஆட்டத்தில் 52.14-வது நிமிடத்தில் லூகாஸ் டோஸ்கானி கோல் அடித்தார். 57.50-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடிதத்தார். 59.25 நிமிடத்தில் இந்தியாவின் ஹர்திக் சிங் கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-5 எனத் தோல்வியடைந்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com