FIH ப்ரோ லீக்: இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி

இரு தோல்விகளுக்கு மத்தியில் இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு இந்திய ஹாக்கி அணியின் வெற்றி ஆறுதலாக அமைந்துள்ளது.
FIH ப்ரோ லீக்: இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி
Published on

லண்டனில் நடைபெற்ற FIH ஹாக்கி ப்ரோ லீக் போட்டியில், இந்திய ஆண்கள் அணி இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், ஆட்டம் ஷூட் அவுட்டிற்குச் சென்றது.

விறுவிறுப்பாக நடந்த ஷூட் அவுட்டில், இந்தியா இங்கிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

நேற்று, லார்ட்ஸில் நடந்த ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில ஆஸ்திரேலியா வீழ்த்தியது.

அதேபோல அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த இரு தோல்விகளுக்கு மத்தியில் இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு இந்திய ஹாக்கி அணியின் வெற்றி ஆறுதலாக அமைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com