ஆசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் மேலும் 2 பதக்கங்களை வென்றது இந்தியா

பெண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் பருல் சவுத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதில் இந்தியாவின் பிரீதி லம்பா வெண்கலம் வென்று அசத்தினார்.
ஆசிய விளையாட்டு போட்டி - தடகளத்தில் மேலும் 2 பதக்கங்களை வென்றது இந்தியா
Published on

பீஜிங்:

ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய அணி 13 தங்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், தடகளத்தில் பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் பருல் சவுத்ரி வெள்ளிப் பதக்கமும், பிரீதி லம்பா வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர்.

இதுவரை இந்தியா 13 தங்கம், 22 வெள்ளி, 23 வெண்கலம் என 58 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com