ஆசிய விளையாட்டு போட்டி - வில்வித்தையில் மேலும் 2 பதக்கம் வென்றது இந்தியா

வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றது.இதே பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வெள்ளி வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டி - வில்வித்தையில் மேலும் 2 பதக்கம் வென்றது இந்தியா
Published on

பீஜிங்:

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

நேற்று 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றது.

இந்நிலையில், இன்று காலை வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஏற்கனவே, வில்வித்தை பெண்கள் காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியா தங்கமும், வெண்கலமும் வென்றுள்ளது.

இந்திய அணி இதுவரை 24 தங்கம், 35வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 99 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com