உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: இலங்கைக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி முன்னேற்றம்

இந்திய அணி அதே 5-வது இடத்தில் உள்ளது.
ICC World Test Champioship
Published on: 

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் புள்ளிகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 48.15 சதவீத புள்ளியில் இருந்து 53.33ஆக அதிகரித்துள்ளது. ஆனால் இந்திய அணி அதே 5-வது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்காள தேசம் கடந்த வாரம் பெற்ற வெற்றியால் அந்த அணி தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளது. வங்காள தேசம் 66.67 சதவீத புள்ளிகள் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா 77.78 சதவீத புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 75 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 72.22 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com