ஆசிய விளையாட்டு 2023 - ஆண்கள் கபடியில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஆண்கள் கபடியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே பெண்கள் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
ஆசிய விளையாட்டு 2023 - ஆண்கள் கபடியில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

பீஜிங்:

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற ஆண்கள் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.

ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய இந்திய அணி 61-14 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரான் அல்லது சீன தைபே அணியுடன் மோத உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com