உலகக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இரு கோல்கள் அடித்தார்.
team india
Published on

16-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன. வரும் 30-ம் தேதி வரை நடக்கும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறுகிறது.

16 நாடுகள்

ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 16 நாடுகளும் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. இந்திய அணி டி பிரிவில் இடம்பெற்று உள்ளன.

பாகிஸ்தான், இங்கிலாந்து வேல்ஸ் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

ஆண்கள் உலகக் கோப்பையில் நெதர்லாந்தில் நடந்த முதல் லீக் போட்டியில் இந்திய அணி வேல்ஸ் அணியை 3–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இங்கிலாந்து உடனான போட்டியில் இந்தியா 2-4 என தோல்வி அடைந்தது.

இந்தியா-பாகிஸ்தான்

இந்நிலையில், இன்று நடந்த ஆண்கள் உலகக் கோப்பையில் இந்திய அணி தனது 3வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5–3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஹர்மன்பிரீத் சிங் அபாரம்

இந்தியா சார்பில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், அபிஷேக் தலா இரு கோல்களை அடித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் 3 கோல் அடிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியில், இந்திய அணி 5 - 3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 2வது வெற்றியைப் பெற்றது. அத்துடன், இந்திய அணி அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com