ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி: ஜப்பானை 5-0 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.இரண்டாவது பாதியில் இந்தியா 5 கோல்களை அடித்து அசத்தியது.
ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி: ஜப்பானை 5-0 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
Published on

சென்னை:

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் 5 கோல் அடித்து அசத்தினர்.

இறுதியில், இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்தியா மலேசியாவை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com