ஆசிய விளையாட்டு போட்டி: போல் வால்டில் இந்திய வீராங்கனை பரனிகா வெண்கல பதக்கம் வென்றார்

ஆசிய விளையாட்டு போட்டி போல் வால்டில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார்.
பரனிகா இளங்கோவன்
பரனிகா இளங்கோவன்
Published on: 

ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான போல் வால்ட் போட்டியில் இந்திய வீராங்கனை பரனிகா இளங்கோவன் அசத்தினார். அவர் 4.15 மீட்டர் தாண்டி வெண்கல பதக்கம் வென்றார். கஜகஸ்தான் வீராங்கனையும் சரியாக 4.15 மீட்டர் தாண்டியதால் இருவருக்கும் வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.

ஜப்பான் வீராங்கனை முதலிடம்

இதன்மூலம் ஆசிய போட்டியில் போல் வால்ட்டில் வெண்கலம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். ஜப்பான் வீராங்கனை மிசாகி மோராட்டா 4.55 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார். இது அவருடைய தனிபட்ட சிறந்ததாகும். சீன வீராங்கனை சுங் நியு 4.50 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார்.

பதக்க பட்டியலில் சீனா முதலிடம்

இந்தியா இதுவரை 2 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் பதக்கம் வென்று 12-வது இடத்தில் உள்ளது. சீனா 97 தங்கம், 36 வெள்ளி, 24 வெண்கல பதக்கம் வென்றுள்ளது. ஜப்பான் 27 தங்கம், 42 வெள்ளி, 44 வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com