ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது- சானியா மிர்சா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலிக் சானியா மிர்சாவை விவாகரத்து செய்தார்.புனித பயணம் மூலம் என்னுடைய வாழ்க்கையை நான் மாற்ற முயற்சி செய்கின்றேன்.
ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது- சானியா மிர்சா
Published on

இந்திய மகளிர் டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்த சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவில் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்தார்.

பல்வேறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சானியா மிர்சா கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலிக் சானியா மிர்சாவை விவாகரத்து செய்தார்.

இதன் மூலம் மனதளவில் சானியா மிர்சா பெருமளவில் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு தன்னுடைய குழந்தைகள் பார்த்துக் கொள்வது தமது பணி என்று சானியா மிர்சா கூறியிருந்தார். இந்த நிலையில் சானியா மிர்சா எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

அதில் என்னை விரும்பும் நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை சொல்ல நான் ஆசைப்படுகின்றேன். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த புனித பயணம் மூலம் என்னுடைய வாழ்க்கையை நான் மாற்ற முயற்சி செய்கின்றேன். இந்தத் தருணத்தில் நான் ஏதேனும் தவறு செய்திருந்தாலும் உங்கள் மனது பாதிக்கும்படி ஏதேனும் செய்திருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் ஆன்மீகப் பயணத்தை நான் மீண்டும் கொண்டு வர முயற்சி செய்ய வாய்ப்பு கிடைத்ததற்கு என் இதயம் நன்றி உணர்வுடன் இருக்கின்றது. என்னுடைய பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ் செவி சாய்த்து என்னை ஆசிர்வதிக்கப்பட்ட பாதையில் வழிநடத்த வேண்டுகின்றேன். இந்தப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com