

ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சனை எதிர்கொண்டார்.
இதில் சிறப்பாக ஆடிய டென்மார்க் வீரர் 21-10, 21-9 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்தியாவின் முன்னணி வீரரான எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.