வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் எச்.எஸ்.பிரனாய் தோல்வி

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.
hs prannoy
Published on
Summary

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சிங்கப்பூரில் ஜேசன் டே உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சிங்கப்பூர் வீரர் 21-13, 21-8 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் அதிச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் தன்வி ஷர்மா, ரக்ஷிதா ராம்ராஜ் ஆகியோரும் அரையிறுதியில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

நடப்பு தொடரில் இந்தியாவின் இஷாராணி பரூவா மட்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com