ஹாங்காங் ஓபன்: லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் வெற்றி

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.இதில் இந்தியாவின் லக்‌ஷயா சென் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ஹாங்காங் ஓபன்: லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய் முதல் சுற்றில் வெற்றி
Published on

ஹாங்காங்:

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், தைவானின் வாங் உடன் மோதினார்.

முதல் செட்டை லக்ஷயா சென்னும், 2வது செட்டை வாங்கும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 21-15 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சீனாவின் லூ குகான்சு உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய பிரனாய் 21-17, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com