வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: எச்.எஸ்.பிரனாய் காலிறுதிக்கு முன்னேற்றம்

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.
hs prannoy
Published on

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் காலிறுதிக்கு முன்னேறினார்.

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவானின் வூ ஷே யிங் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய எச்.எஸ்.பிரனாய் 21-15, 13-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் சன்ஸ்கார் சரஸ்வத் 21-12, 10-21, 21-18 என்ற செட் கணக்கில் சக வீரரான கிரண் ஜார்ஜை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், இந்தியாவின் தன்வி ஷர்மா, மாளவிகா பன்சோத், ரக்ஷிதா ராம்ராஜ், மான்சி சிங் மற்றும் இஷா ராணி பரூவா ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com