சிக்சர் அடித்த பராக் - கை கொடுக்க மறுத்த ஹர்சல் படேல்- வைரலாகும் வீடியோ

ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரியான் பராக் மற்றும் ஹர்சல் படேல் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கை கொடுக்க மறுத்த ஹர்சல் படேல்
கை கொடுக்க மறுத்த ஹர்சல் படேல்
Published on

ஐபிஎல் கிரிக்கெட்டின் 39-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் மற்றும் பெங்களூர் அணி வீரர் ஹர்சல் படேல் ஆகியோர் மோதிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் அதிகமாக எடுக்காத நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் 56 ரன்கள் எடுத்து அணிக்கு கெளவுரமான ஸ்கோரை எடுத்து கொடுத்தார். 

ஹர்சல் படேல் வீசிய கடைசி ஓவரில் பராக் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். ஓவர் முடிந்து அனைத்து வீரர்களும் ஓய்வு அறைக்கு செல்லும் போதுதான் இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு அனைத்து வீரர்களும் கை கொடுப்பார்கள். அதன்படி பராக் கை கொடுக்க வரும் போது ஹர்சல் படேல் அவருக்கு கை கொடுக்காமல் சென்று விடுவார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com